துர்கா ஸ்டாலின் காசிக்கு திடீர் பயணம்..! "பாரதியார் இல்லம்" பார்த்து வாயடைத்து போன சுவாரஸ்யம்..!

By thenmozhi g  |  First Published Dec 27, 2018, 7:27 PM IST

திமுக  தலைவர் ஸ்டாலின் அரசியலில் ஒரு பக்கம் பிசியாக இருக்க, உதயநிதி ஸ்டாலினும் இன்னொரு பக்கம் பிசியாக இருக்க, அக்கா தங்கையோட நாமும் பிசியாக ஏன் எங்காவது செல்லக்கூடாது என சூப்பர் திட்டம் போட்டு காசிக்கு கிளம்பிட்டாங்க  துர்கா ஸ்டாலின் அவர்கள். 


துர்கா ஸ்டாலின் காசிக்கு திடீர் பயணம்..!  

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் ஒரு பக்கம் பிசியாக இருக்க, உதயநிதி ஸ்டாலினும் இன்னொரு பக்கம் பிசியாக இருக்க, அக்கா தங்கையோட நாமும் பிசியாக ஏன் எங்காவது செல்லக்கூடாது என சூப்பர் திட்டம் போட்டு காசிக்கு கிளம்பிட்டாங்க துர்கா ஸ்டாலின் அவர்கள். 

Tap to resize

Latest Videos

ஆமாங்க..அதுமட்டுமா ..? துர்கா மேடத்திற்கு காசிக்கு சென்று வர வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையும் கூட... அதுவும் இப்ப இருக்குற டிசம்பர் மாத குளிருல, கங்கை நதிக்கரை ஓரத்திலே... நின்றுக்கொண்டு தரிசனம் செய்வது என்பது எல்லோருக்கும் அமைந்து விடுமா என்ன ...

ஆனால் துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு பக்காவா அமைந்துவிட்டது இந்த ட்ரிப். துர்கா ஸ்டாலினுடன் அவருடைய அக்கா பார்வதி, தங்கை ஜெயந்தி மற்றும் பார்வதியின் கணவர் உள்பட குடும்ப உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஜாலி ட்ரிப் சென்று இருக்காங்க..

காசிக்கு சென்ற உடனே, முதலில் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு அப்படியே கங்கை நதிக்கரையில் நீரோட்டத்தை வியந்து பார்த்த துர்கா ஸ்டாலின், கண்ணுக்கு எட்டின தூரத்தில் இருந்த ஹரிச்சந்திரன் கட், மணிகர்ணிகா கட் இரண்டையும் பார்வையிட்டார்.  இதுல என்ன இருக்குனு கேக்றீங்களா..? 

உங்களுக்கு விஷயம் தெரியாதா.. இந்த இரண்டு இடங்களும் சடலத்தை எரிக்கக்கூடிய இடம். அதுவும் 24 மணி நேரமும் சடலங்களை எரித்துக் கொண்டே இருப்பார்கள் என்றால் வியப்பாக இருக்காதா என்ன..? அதானே.. படிக்கிற நமக்கே வாய் பிளக்குதுனா நேர்ல போயி பார்த்த துர்கா ஸ்டாலினுக்கு எப்படி இருக்கும்னு பாருங்க...

அடுத்ததாக, 80 அடி ஆழ்கடல் மாதிரி இருக்குற கங்கை நதியில், போட் மூலம் ஒரு சவாரி போயி இருக்காங்க..

ஆஹா .. என்ன அழகு..எத்தனை அழகு!  வாழ்வில் இதை எல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்கணும் என தனது உறவினர்களுடன் பேசிய படியே காசியின் பிரமாண்ட அரண்மனைகளை சுற்றி பார்த்தாங்க...

இதை எல்லாம் பார்த்து பிரமித்து போன துர்கா ஸ்டாலின் கடைசியாக, அங்குள்ள பாரதியார் இல்லத்தையும் சுற்றி பார்த்து பிரமித்து நின்றுள்ளார். 


உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், காசிக்கு சென்று வருவது என்பது எத்தகைய சிறப்பு வாய்ந்தது அல்லவா..? அந்த சிறப்பை உணர்ந்த துர்கா ஸ்டாலின் மனநிறைவோடு சென்னை திரும்பி  உள்ளார்.

click me!