தமிழக அரசு நாளை செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை துவங்கி வைக்கவுள்ளது. இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்கள், திமுகவினர்களுக்கு சில அறிவுரைகளை முன் வைத்துள்ளார்.
நாளை செப்டம்பர் 15ஆம் தேதி திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் திட்டம், பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நாளை துவங்கி வைக்கப்பட உள்ளது. தமிழக அளவில் ஒரு கோடியே 6 லட்சம் பெண்களுக்கு இந்த மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக தமிழக அளவில் ஒரு கோடியே 63 லட்சம் மகளிர் விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பங்கள் யார் யாருக்கு எல்லாம் ஏற்கப்பட்டுள்ளது? யார் யாருக்கெல்லாம் நிராகரிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்த குறுஞ்செய்தி வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
இந்நிலையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சி சாதனை குறித்தும், மகளிர் உரிமைத் தொகை குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்கள் திமுகவினருக்கு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
அதன்படி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் திட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் "கலைஞர் உரிமைத் தொகைக்கு நன்றி", உரிமைத் தொகை 1000" போன்ற வாசகங்கள் எழுதி, வீட்டு வாசலில் கோலம் விட வேண்டும் என்றும் குறிப்பாக திமுக நிர்வாகிகளுடைய வீட்டில் இந்த கோலங்கள் போடப்பட்ட வேண்டும் அதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உரிமைத் தொகை குறித்தான சுவரொட்டிகளை மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடங்களில் ஓட்ட வேண்டும் என்றும், பொது இடங்களில் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் என்பதை முன்னிட்டு மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஆட்டோ மூலமும் மகளிர் உரிமை தொகை குறித்து விளம்பரம் செய்யலாம் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார். நாளை காஞ்சிபுரத்தில் நடக்கவுள்ள நிகழ்வில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, மகளிர் உரிமை தொகை திட்டத்தை துவங்க உள்ளார்.
பிற மொழிகளை இழிவுபடுத்தும் அமித் ஷா: உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!