
ரூ.10,500 விலையுள்ள எச்.பி. பிரிண்டர்களைக் கொண்டு, ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என, போலி கரன்ஸி நோட்டுக்களை ரூ.65 லட்சம் வரைக்கும் போலி நோட்டுகள் கைபற்றப்பட்டுள்ளன.
கோவை சேர்ந்த விக்னேஷ், தன்ராஜ், சாத்தூர், கயத்தாரைச் சேர்ந்த சேத்தூரான், கொம்பையா ஆகிய நான்கு பேரும் சீக்கிரமே கோடீஸ்வரர்கள் ஆகி, செட்டில் ஆக பேராசைப்பட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட இவர்கள் பெரிய அளவில் கள்ள நோட்டுக்களைத் தயார் செய்து, டாஸ்மாக், திருவிழாக்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் புழக்கத்தில் விட்டு சம்பாதிக்க திட்டம் தீட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.
கோவை சேர்ந்த கூலித் தொழிலாளியான சேத்தூரானின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் இருப்பதும், அவரது நண்பரான கொம்பையாவை அடிக்கடி சந்திப்பதும், ரகசிய தகவலாக விருதுநகர் எஸ்.பி. ராஜராஜனுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சேத்தூரானும் கொம்பையா இருவரையும் வளைத்துப் பிடித்தனர். இவர்களின் வாகனத்திலிருந்து ரூ.10,50,000 பெறுமான கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டது.
இவர்களை விசாரித்ததில், கோயம்புத்தூரில் இருந்த விக்னேஷும் தன்ராஜும் சிக்கியிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து ரூ.54,57,040 போலி நோட்டுக்களும், பிரிண்டர்களும், தாள்களும், அச்சிடும் மைகளும் கைப்பற்றியுள்ளனர்.
வெறும் ரூ.10,500 க்கு எச்.பி கலர் பிரிண்டர்களை வாங்கிவிட்டு அதில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என ரூ.65 லட்சம் வரைக்கும் கலர் ஜெராக்ஸ் எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.