
அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் இராமபுரம் ஊராட்சியில் இலட்சுமிபுரம் காலனியில் குடிசை வீட்டில் தீப்பிடித்து அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியதால் உடைமைகள் மற்ரும் வீடுகள் எரிந்து நாசமாயின.
இலட்சுமிபுரம் காலனியில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் ஸ்டெல்லாபாய், கூலி தொழிலாளி. இவர் புதன்கிழமை அதிகாலையில் சமையல் செய்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் பலத்த காற்றும் வீசியதால், அருகில் உள்ள பாக்கியம் வீட்டிற்கும் தீ பரவியது. உடனே, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதில் அந்த குடிசை வீடுகளில் இருந்த தையல் எந்திரம், துணிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அவர் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரை போனில் தொடர்பு கொண்டு பேசினார். தொடர்ந்து,
கிராம நிர்வாக அதிகாரி கலைசெல்வி நேரில் சென்று விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மூலம் கிடைக்கும் நிவாரண நிதி விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.