
விருதுநகர்
பதினைந்து வருடங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.49 ஆயிரத்து 140-ஐ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவுப் பணியாளர்கள் ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர்.
சிவகாசி அருகே உள்ள ஆனையூர் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனையூர் ஊராட்சியில் 15 வருடங்களாக துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 1992 - 2006 வரை வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.49 ஆயிரத்து 140 இன்னமும் வழங்கப்படவில்லை.
மேலும், வீட்டு வாடகைப் படி நிலுவையில் உள்ளது. மாத ஊதியம் ரூ.4806-க்கு பதிலாக ரூ.4000 மட்டுமே வழங்குகின்றனர்.
எனவே, எங்களுக்குரிய அகவிலை படி, வீட்டு வாடகைப் படியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.