
போக்குவரத்து துறை தொழிலாளர்கள் நேற்று முத்த மேற்கொண்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்
தமிழகம் முழுவதும் நேற்று முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதால்,வேறு ஆட்களை வைத்து தற்காலிகமாக வெகு சில பெருந்துகம் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது
2.57% ஊதிய உயர்வை தொழிற்சங்கங்கள் கேட்ட நிலையில் 2.44% மட்டுமே அரசு தருவதாக ஒப்புக் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை ஏற்க மறுக்கும் போக்குவரத்து தொழிற்சங்கம் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வசூல் வேட்டையில் இறங்கிய ஆட்டோ மாறும் கால் டேக்ஸி
இதனை சாதகமாக பயன்படுதிகொள்ளும் ஆட்டோ மற்றும் கால் டாக்சிகள் சாதாரணமாக வசூலிக்கும் கட்டணத்தை விட, மும்மடங்கு கட்டணம் அதிகமாக வசூலித்து வருகிறது
உதாரணம்:
40 ரூபாய் கட்டணம் என்றால்,
120 உதல் 150 ரூபாய் வரை வசூல் செய்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.