
திருப்பூர் மாவட்டம் சாமாளபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தொடர்ந்து 2 மணி நேரமாக போராடிய பொதுமக்கள் மீது , அதிரடி படை போலிசாரும் , டிஎஸ்பி பாண்டியராஜனும் அராஜகமாக மக்கள் மீது தடியடி நடத்தினர்.
குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது திரும்ப திரும்ப வெறித்தனமாக குறி வைத்த தாக்கினார் டி எஸ் பி பாண்டியராஜன்.
போலீசார் நடத்திய வெறித்தனமான தாக்குதலில், டி எஸ் பி பாண்டியராஜன் ஒரு வயதான பெண்மணியின் கன்னத்தில் ஓங்கி பளார் என நடு ரோட்டில் அடித்தார் . அதனை தொடர்ந்து, பலரது மண்டை உடையும் அளவுக்கு போலீசார் கண் மூடித்தனமாக தாக்கினர்
மேலும் , டிஎஸ்பி பாண்டியராஜன் பெண்களை மட்டும் குறி வைத்து தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பலரின் மண்டை உடைக்கப் பட்டாலும் , ஒருவரின் மண்டை பலமாக அடிப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட அழைத்து செல்லும் காட்சி ஒட்டு மொத்த மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த சம்பவத்தால் தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர் .