பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னையில் வரும் 30 ஆம் தேதி நகரின் 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னையில் வரும் 30 ஆம் தேதி நகரின் 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னையில் அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வரும் 30 ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: மாநகராட்சி அதிகாரிகள் மீது கடை உரிமையாளர் தாக்குதல் - தூத்துக்குடியில் பரபரப்பு
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.