சென்னையில் இந்த இரண்டு நாட்கள் பார்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்... அறிவித்தார் ஆட்சியர்!!

By Narendran SFirst Published Sep 28, 2022, 8:37 PM IST
Highlights

சென்னையில் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகிய இரு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார். 

சென்னையில் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகிய இரு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த  நாளை அரசு விடுமுறையாகயாக உள்ள நிலையில், சென்னையில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி  டாஸ்மாக் கடைகள், பார்கள், உரிமம் பெற்றுள்ள  சிறப்பு பார்களும் மூடப்பட வேண்டும்.

இதையும் படிங்க: மதுரையில் மின் திருட்டு குறித்து புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு

அதேபோல், வரும் 9 ஆம் தேதி  இறைதூதர் முகமது  நபியின் பிறந்த தினமான மிலாடி நபியையொட்டி அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆட்சியரின் இந்த உத்தரவை அடுத்து சென்னையில் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியும், 9 ஆம் தேதியும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், உரிமம் பெற்றுள்ள சிறப்பு பார்கள் அனைத்தும் மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: திறந்த வெளியில் உடை மாற்றும் பெண்கள்: மாவட்ட நிர்வாகத்தை வசைபாடும் பயணிகள்

மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்த நாள் அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த புனித நாளில் காந்தியின் திரு உருவ படத்திற்கு தலைவர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மரியாதையை செய்வர். மேலும் அக்டோபர் 2 ஆம் தேதி அரசு விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 

click me!