
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் உள்ள சத்யசாய் நகர் பகுதியில் ரூ.11 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி, சத்யசாய் நகர் பகுதியில் 750 குடியிருப்புகள் உள்ளன.
இந்தக் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூ.11 இலட்சத்து 51 ஆயிரத்து 454 மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் புதிய குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குடிநீர் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
மேலும், பணிகளை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தொடர்புடைய அ;லுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவும் பிறப்பித்தார்.
இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானபிரகாசம், ராஜசேகரன், உதவி பொறியாளர் தீபமணி, செயலாளர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.