
தேனி
தேனி மாவட்டத்திற்கு உள்பட்ட நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேனியில் மொத்தம் 10 இலட்சத்து 54 ஆயிரத்து 263 வாக்காளர்கள் உள்ளனர்.
அடுத்த வருடம் 2018 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு தேனி மாவட்டத்திற்கு உள்பட்ட நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ந.வெங்கடாசலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.
இதில், மாவட்டத்திற்கு உள்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 5 இலட்சத்து 20 ஆயிரத்து 281 ஆண்கள், 5 இலட்சத்து 33 ஆயிரத்து 820 பெண்கள், 162 திருநங்கைகள் என மொத்தம் 10 இலட்சத்து 54 ஆயிரத்து 263 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை:
ஆண்டிபட்டி
ஆண்கள் – 1 இலட்சத்து 29 ஆயிரத்து 181, பெண்கள் – 1 இலட்சத்து 30 ஆயிரத்து 626, திருநங்கைகள் - 21, மொத்தம் – 2 இலட்சத்து 59 ஆயிரத்து 828.
பெரியகுளம் (தனி)
ஆண்கள் – 1 இலட்சத்து 29 ஆயிரத்து 994, பெண்கள் – 1 இலட்சத்து 33 ஆயிரத்து 926, திருநங்கைகள் - 100, மொத்தம் – 2 இலட்சத்து 64 ஆயிரத்து 020.
போடி
ஆண்கள் – 1 இலட்சத்து 29 ஆயிரத்து 688, பெண்கள் – 1 இலட்சத்து 33 ஆயிரத்து 016, திருநங்கைகள் - 13 என மொத்தம் – 2 இலட்சத்து 62 ஆயிரத்து 747.
கம்பம்
ஆண்கள் – 1 இலட்சத்து 31 ஆயிரத்து 418, பெண்கள்- 1 இலட்சத்து 36 ஆயிரத்து 222, திருநங்கைகள் - 2 என மொத்தம் – 2 இலட்சத்து 67 ஆயிரத்து 668.
வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து நிரந்தர வாக்குச் சாவடி மையங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மக்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்குச் சென்று வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, தங்களது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.