தனியார் பேருந்துகளுக்கு சுங்க சாவடி கட்டணம் வசூலிக்க கூடாது – போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவு...

First Published May 16, 2017, 11:14 AM IST
Highlights
dont charge fees for private buses in tollgate


போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்வதால் வெளிமாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகளிடம் சுங்கசாவடி கட்டணம் வசூலிக்ககூடாது என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் போக்குவத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்தொழிலாளர்களுடன் 5 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் நேற்று  முன் தினம் முதலே போக்குவரத்து தொழிலாளர்கள்போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் இந்தபோராட்டத்தால் தனியார் பேருந்துகளின் இயக்கம் அதிகபடுத்தபட்டுள்ளது.

இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்று மதியம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியூர்களில் இருந்து 1000 தனியார்பேருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு இயக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனவும்,ஓட்டுனர், நடத்துனர், பற்றாக்குறை ஏற்படின் தினக்கூலி அடிப்படையில் தொழிலாளர்கள் நியமனம்செய்யபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாகநீடிக்கிறது.

போக்குவரத்து பிரச்சனையை சமாளிக்கும் வகையில் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தனியார்பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகளுக்கு சுங்கக்கட்டணம்வசூலிக்கக்கூடாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

click me!