"மதுக்கடைக்கு எதிராக போராடும் மக்களை அடிக்க கூடாது" - போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 
Published : May 08, 2017, 04:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
"மதுக்கடைக்கு எதிராக போராடும் மக்களை அடிக்க கூடாது" - போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

dont attack people who protest against tasmac

மதுக்கடைகளுக்கு எதிராக போராடும் மக்களை போலீஸ் தாக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றபின் முதலமைச்சர் 5 கையோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் நெடுஞ்சாலைகளில் உள்ள 500 மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என்பதும் ஒன்று.

அதன்படி நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் அகற்றப்பட்ட 500 மதுபான கடைகளையும் கிராம புறங்களில் திறக்க தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இதற்கு கிராமப்புற மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து புதிதாக திறக்கப்படும் மதுபான கடைகளை சூறையாடி வருகின்றனர்.

இவ்வாறு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது போலீசார் தாக்குதல் நடத்தி வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்ற்னர்.

இந்நிலையில், இது குறித்த பொதுநல வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அந்த ஊர்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது எனவும், மதுக்கடைகளுக்கு எதிராக அமைதியாக மக்கள் போராட்டம் நடத்தினால் போலீஸ் அவர்களை தாக்க கூடாது எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பிச்சைக்காரனா நீ.?? உயிர் நாடியில் எட்டி உதைத்தார் சவுக்கு சங்கர்! புகார் கொடுத்த தயாரிப்பாளர் பகீர் விளக்கம்
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!