உண்மையில் மெர்சல் காட்டும் டாக்டர் ராமசாமி ..! "5 ரூபா" தான் பீஸ்..!

First Published Oct 23, 2017, 4:15 PM IST
Highlights
doctors serving people by rs 10


மெர்சல் படத்தில் 5 ரூபா சிகிச்சை குறித்து விஜய் டைலாக் பேசி இருப்பார்.ஆனால் உண்மையிலேயே இது போன்ற ஐந்து ரூபாய்க்கும்,பத்து ரூபாய்க்கும் சிகிச்சை பார்க்கும் டாக்டர் இருக்க தான் செய்கிறார்கள்.

தென்காசியில் சந்தைக்கு எதிர்ப்பகுதியில், அவர் க்ளினிக். சற்று மேடான பகுதி. ஆறேழு படிகள். ஒரே ஒரு அறை. அதில் சுவரை சுற்றி நாலு பெஞ்சுகள். அடுத்த சிறு அறையில் இவர் அமர்ந்திருப்பார். பெயர் டாக்டர் ராமசாமி.

அப்போது தென்காசி அரசு மருத்துவ மனையில் டாக்டராகவும் இருந்தார். 
அதனால் அந்த அரசு வருமானமே போதும் என்று முடிவு எடுத்து, மாலை நேரங்களில் இந்த கிளினிக்கில் வந்துவிடுவார்.

1987 இல்,இவர் நோயாளிகளிடமிருந்து சிகிச்சைக்காக வாங்கும் பீஸ் ரூ. 2, ஊசி ரூ. 5 மட்டுமே....தற்போது பாத்து ரூபாய் மட்டுமே....

பேச்சுக் கொடுத்துக் கொண்டே, சிரித்த முகத்துடன் அணுகும் பண்பு கொண்டவர் இப்படி எத்தனையோ பேர் தென்காசியில் குடும்ப டாக்டராக வைத்துக் கொண்டிருந்தார்கள் அவரை..!

யார் இந்த மருத்துவர்..? அவர் என்ன சொல்கிறார் பார்க்கலாம்...  

“நான் திருநெல்வேலி மருத்துவக்கல்லுாரியில் எம்பிபிஎஸ்ம் சென்னையில் மேற்படிப்பும் படித்தேன் படித்து முடித்த உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவராக வேலை. பல ஊர்களில் வேலை பார்த்துவிட்டேன் தென்காசி வந்த பிறகு ஊர் பிடித்துப்போனதால் இங்கேயே ஒரு வீட்டை வாங்கி நிரந்தரமாக இருந்துவிட்டேன்

இந்த நிலையில் அரசு பணி வேண்டாம் என்று விட்டுவிட்டு தென்காசியில் சிறிதாக கிளினிக் வைத்து மக்களுக்கான மருத்துவத்தை தொடர்கிறேன்.

கிளினிக் காலை பத்து மணியில் இருந்து ஒரு மணிவரையிலும் பின் மாலை ஐந்து மணியில் இருந்து இரவு ஒன்பது மணிவரையிலும் திறந்து இருக்கும்.தென்காசியில் இருந்து மட்டுமல்லாது சுற்றுப்புறத்தில் உள்ள கிராமமக்கள் பலரும் என்னை தேடி வருவார்கள்.நான் நோயின் தன்மைக்கேற்ப ஆலோசனைகளை வழங்கி மருந்து மாத்திரைகளை எழுதிதருவேன்.

இப்படித்தான் கடந்த 33 வருடங்களாக இயங்கிக்கொண்டு இருக்கிறேன், இப்போது எனக்கு வயது அறுபத்தாறு ஆகிறது.எனது அனுபவமும் படிப்பும் மக்களுக்கு உதவட்டுமே என்ற மனநிலைதான் எனக்கு, ஒரு போதும் மருத்துவத்தை காசாக்கி பார்க்க விரும்பியது இல்லை. இலவசமாக பார்த்தால் ஒரு மரியாதை இருக்காது என்பதால் இந்த பத்து ரூபாய் வாங்குகிறேன். அது கூட எனது உதவியாளர்களுக்கான சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே.....

ஆரம்பத்தில் ஒரு ரூபாய்தான் வாங்கிக்கொண்டு இருந்தேன் ரொம்பகாலம் அதுதான் ஒடிக்கொண்டு இருந்தது பிறகு எனக்கு உதவியாளர்கள் நியமித்தபிறகுதான் பத்து ரூபாயானது அந்த பத்து ரூபாயைக்கூட நான் கையில் வாங்குவது இல்லை கிளினிக் பக்கத்தில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கும்போது கடைக்காரர்கள் டாக்டர் பீஸ் பத்து ரூபாய் எடுத்துக்கொள்ளலாமா? எனகேட்டு எடுத்துக்கொள்வார்கள் அதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை அடுத்த முறை முடிந்தால் கொடுங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள் இதுதான் என்கதை என்றார் ......

டாக்டர் தோல் சிகிச்சையில் மேற்படிப்பு படித்தவர் என்பதால் பொது மற்றும் தோல் சிகிச்சை தொடர்பான நிறைய நோயாளிகள்  இவரிடம் சிகிச்சைக்காக  வருவது  வாடிக்கையாகி விட்டது

இந்த  மருத்துவரின்  அணுகுமுறையாலும், குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்ப்பதாலும் இவரை தேடி வரும் மக்கள் ஏராளம்....    

 

 

click me!