"விதிமுறையை பின்பற்றாத மருத்துவ கலந்தாய்வு எதற்கு?" – போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்

Asianet News Tamil  
Published : May 25, 2017, 01:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
"விதிமுறையை பின்பற்றாத மருத்துவ கலந்தாய்வு எதற்கு?" – போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்

சுருக்கம்

doctors protest against medical counselling

விதிமுறைகளின் படி மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நடைபெறவில்லை என கூறி சென்னையில் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 13 கல்லூரிகளில் மட்டும் மருத்துவப் பட்ட மேற்படிப்புகள் இருக்கின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு 562 இடங்கள், மருத்துவப் பட்டய மேற்படிப்புக்கு 200 இடங்களும் மாநில அரசுக்கு உள்ளன.

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை முடிவடைந்தது.

அதைதொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வில் 67 பேர் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தைப் பெற்றனர். 364 பேர் மறு ஒதுக்கீட்டின் மூலம் படிப்புகளையும், கல்லூரிகளையும் மாற்றிக் கொண்டனர். வரும் 27-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், விதிமுறைகளின் படி மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நடைபெறவில்லை என கூறி சென்னையில் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மருத்துவர்களாக இல்லாதவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மழை குறித்து வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!
ஓய்வூதியத் திட்டம்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை திட்டமிட்டு ஏமாற்றியது அம்பலம்.. சொல்வது யார் தெரியுமா?