விஷம் குடித்துவிட்டு பெற்றொரை பார்க்க சென்ற டாக்டர் மகன் இறப்பு; காரணம் தெரியாமல் பெற்றோர் குமுறல்...

 
Published : Jun 11, 2018, 11:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
விஷம் குடித்துவிட்டு பெற்றொரை பார்க்க சென்ற டாக்டர் மகன் இறப்பு; காரணம் தெரியாமல் பெற்றோர் குமுறல்...

சுருக்கம்

doctor son went to see parents after drink poison and dead

சிவகங்கை 

சிவகங்கையில் விஷம் குடித்துவிட்டு பெற்றோரை பார்க்க சென்ற டாக்டர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். காரணம் தெரியாமல் பெற்றோர் குமுறுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை இரயில்வே காலனியைச் சேர்ந்தவர்கள் மனோகரன் – கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்கள் இருவருமே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். 

இவர்களது மூத்த மகன்  சிவநாதன் (25). இவர் சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்று அங்கேயே பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவில் மானாமதுரைக்கு வந்து தனது பெற்றோர்களை சந்தித்துள்ளார். 

அதன்பின்னர், தனது பெற்றோரிடம் அவர் தான் வி‌ஷம் குடித்துள்ளதாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தபெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு சென்றனர். 

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிவநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மானாமதுரை காவலாளர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது மகன் எதற்காக விஷம் குடித்தார் என்று தெரியாமல் அவரது பெற்றோர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!
தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு