‘ஜெ’ கைரேகை வெச்சது உண்மைதானா...? விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்த டாக்டர் பாலாஜி! 

 
Published : Dec 07, 2017, 03:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
‘ஜெ’ கைரேகை வெச்சது உண்மைதானா...? விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்த டாக்டர் பாலாஜி! 

சுருக்கம்

doctor balaji appeared before arumugasamy commission to explain jayalalitha thumb impression issue

சென்னையில் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இடைத்தேர்தல் நடைபெற்ற இரு தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனுவில் கைரேகை வைத்து அங்கீகரித்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில், ஜெயலலிதாவின்  கைரேகையை பெற்றது தொடர்பான விவரங்களை அளிக்க, விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார் டாக்டர் பாலாஜி.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், அரசு டாக்டர் பாலாஜியுடன்அரசு மருத்துவமனை டாக்டர் தர்மராஜனும் ஆஜராகி விளக்கமளித்தார்.

சென்னை அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டிருந்தபோது மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த 2016ல் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில்,  அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸ் போட்டியிட்டார்.

அப்போது அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸையும், அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரியும், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில், ஜெயலலிதா தனது இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவணப் படிவத்தில் பதிவு செய்து கொடுத்ததாகக் கூறப்பட்டது.  அவரிடம் கைரேகை பெறப்பட்டபோது, சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பாலாஜி, படிவத்தில் சான்று ஒப்பம் அளித்து தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தார்.

ஆனால், தற்போது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்கள் எழுந்ததால், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. இந்த விசாரணை ஆணையம், டாக்டர் பாலாஜியை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.

இதன்படி, டாக்டர் பாலாஜி, டாக்டர்  தர்மராஜன் இருவரும் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம், மதுரை, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் ஏ.கே.போஸை அங்கீகரித்து தேர்தல் ஆவணத்தில் இடம்பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை பெற்றது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடக்கும் எனத் தெரிகிறது. 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!