
தமிழகத்ற்கு 'நீட்' தேர்வு வேண்டாம். அதனை ரத்து செய்ய வேண்டும் எண்ட்ரு திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கட்சிகள் அமைப்புகள் என அனைத்து தரப்பிலும் போராட்டங்கள் நடக்கின்றன. அந்த வகையில் திருவள்ளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம், நேதாஜி சாலையில் எம்ஜிஆர் சிலை அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மு.வ.சித்தார்த்தன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட அமைப்பாளர் கோதண்டன், மாவட்ட நிர்வாகிகள் யோகா, குமார், நேரு, திருவரசு, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநில நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், அ.பாலசிங்கம், தளபதி சுந்தர், கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் தி.ராசகுமார் ஆகியோர் பேசினர்.
தமிழகத்தில் “நீட்” தேர்வை கொண்டு வந்தால் கிராமப்புற மாணவர்களும், பொருளாதராத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் கல்வி எட்டாத கனியாகிவிடும். மேலும், நீட் தேர்வால் பாதிப்பே அதிகம் என்று எடுத்துரைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் சங்கர், இளவரசு, செல்வம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நகர அமைப்பாளர் ரஜினி நன்றித் தெரிவித்தார்.