BJP: தமிழகத்தில் இதுவரை பாஜக எந்தெந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது தெரியுமா? இதோ முழு தகவல்!

Published : Jun 04, 2024, 06:31 AM ISTUpdated : Jun 04, 2024, 07:18 AM IST
 BJP: தமிழகத்தில் இதுவரை பாஜக எந்தெந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது தெரியுமா? இதோ முழு தகவல்!

சுருக்கம்

தமிழகத்தில்  எப்படியாவது தாமரையை மலர செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பாஜகவால் வெல்ல முடியவில்லை.

தமிழகத்தில் திமுக பாஜகவுக்கு இடையே தான் போட்டி என்று கூறிவரும் பாஜக, கடந்த காலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் எந்தெந்த தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெற்றுள்ளது என்பதை பார்ப்போம். 

தமிழகத்தில்  எப்படியாவது தாமரையை மலர செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பாஜகவால் வெல்ல முடியவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் எந்தெந்த நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக வென்றுள்ளது என்பதை பார்ப்போம். 

இதையும் படிங்க: ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌.. வி.கே.பாண்டியனை கண்டு ஏன் அஞ்சுகிறது? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

கடந்த 1998ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. அதில், நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாஸ்டர் மதன், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலம் வென்றனர்.  ஒரே ஆண்டில் அதிமுக ஆதரவை விலக்கி கொண்டதால் மத்தியில் வாஜ்பாயின் பாஜக அரசு 13 மாதங்களில் கவிழ்ந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. 

இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. நீலகிரியில் மாஸ்டர் மதன், நாகர்கோவிலில் பொன். ராதாகிருஷ்ணன், திருச்சில் ரங்கராஜன் குமாரமங்கலம், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றனர். 2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன்பிறகு 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். பாஜக கூட்டணியில் இடம் பிடித்த பாமக  தருமபுரி தொகுதியில் வென்றது. 

இதையும் படிங்க: ஓபிஎஸ்ஸுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியா.? சிரிச்சிகிட்டே பதில் சொன்ன ஓபிஎஸ்.. அப்போ அதுதான். !!

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்திருந்த பாஜகவால் எந்த  தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. அதிமுக பாஜக கூட்டணியில் போட்டியிட்ட 40 தொகுதியில் தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து  பாமக, அமமுக, ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இந்த தேர்தலில் எப்படியும் நெல்லை, வேலூர், கன்னியாகுமரி, பெரம்பலூர் ஆகிய தொகுதியில் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக இருந்து வருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!