
இப்போது மாநிலத்துக்கு ஒரு மீன் மாநில மீனாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அயிரை மீனை தமிழகத்தின் மாநில மீனாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கறி மீனும், தெலங்கானாவில் முரல் மீனும் அந்த மாநில மீன்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகம் அயிரை மீனை தமிழகத்தின் மாநில மீன் என்று அறிவிக்க முடிவு செய்துள்ளது.
அயிரை மீன்கள் தற்போது தமிழகத்தில் மட்டும் அதிகம் கிடைக்கக்கூடிய மீன்களாக அறியப்பட்டுள்ளது. அயிரை மீன்கள் கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அயிரை மீன்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் கிராக்கி அதிகமாக இருப்பதாக தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.