திருப்பூரில் தயாரான பிரதமர் மோடியின் டீ சர்ட்..இதை கவனிச்சீங்களா.? அப்படி என்ன ஸ்பெஷல்.!!

By Raghupati RFirst Published Apr 10, 2023, 5:50 PM IST
Highlights

பந்திப்பூர், முதுமலை ஆகிய இடங்களுக்கு பயணம் செய்த போது பிரதமர் மோடி அணிந்திருந்த டீ சர்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரதமர் மோடி நேற்று பந்திப்பூர், முதுமலை ஆகிய இடங்களுக்கு சென்றார். பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பிரதமர் மோடி 2 மணி நேரம் சபாரி செய்து விலங்குகளையும், பறவைகளையும் கண்டு ரசித்தார். மேலும் அவர், வனவிலங்குகளை புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தார். காலை 7.50 மணி அளவில் அங்கு பிரத்யேகமாக தயாரித்து தயாராக நிறுத்தப்பட்டு இருந்த சபாரி ஜீப்பில் ஏறி அடர்ந்த வனப்பகுதிக்குள் சபாரி சென்றார். 

அங்கு பிரதமர் மோடி வன விலங்குகளை பார்வையிட்டார். பிறகு பந்திபூர் புலிகள் காப்பகத்தில் இருந்து வாகனம் மூலம் முதுமலை வந்தார்.முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில் வளர்ப்பு யானைகளைப் பார்வையிட்ட மோடி ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி அணிந்திருந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்றே சொல்லலாம். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். நேற்று பிரதமர் அணிந்திருந்த ஆடையும் இணையத்தில் பேசு பொருளானது. இதுகுறித்து இந்த ஆடையை தயாரித்த திருப்பூரில் உள்ள எஸ்சிஎம் நிறுவனத்திடம் பேசினோம். 

அப்போது, “பிரதமர் மோடி அணிந்திருந்த டீ சர்ட் நாங்கள் தயாரித்தது தான். கர்நாடகாவில் எங்கள் நிறுவனத்தை சேர்ந்த 15 டீ சர்ட்டுக்களை பிரதமர் மோடியின் டீமை சேர்ந்தவர்கள் வாங்கி உள்ளனர். அதில் ஒன்றை தான் பிரதமர் மோடி தேர்வு செய்து அணிந்திருந்தார்.இது எங்கள் நிறுவனத்திற்கு பெருமைமிக்க தருணம் ஆகும்.” என்று கூறினார்கள்.

இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் உரிமையாளர் பரமேஸ்வரன், "டெக்கத்லான் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் பெங்களூர் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் 20 வருடங்களுக்கும் கடைகளை நடத்தி வருகிறோம். பிரதமர் அணிந்த கேமோ டீ சர்ட்டை 15 வருடங்களுக்கும் மேலாக விற்பனை செய்து வருகிறோம். கடந்த வாரத்தில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெங்களூர் கிளையை தொடர்பு கொண்டு பேசினார்கள்.

பிரதமர் மோடி அணிந்திருந்த  கேமோ டீ சர்ட்டை இந்தியாவிலேயே நாங்கள் தான் தயார் செய்து வருகிறோம். இதன் விலை, 200கும் குறைவாகவே நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். அதேபோல பிரதமர் மோடி எங்களது நிறுவன ஆடையை அணிந்து எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. எங்களது நிறுவன விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார்கள்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள தமிழக பாஜக தொழிற்பிரிவை சேர்ந்த செல்வகுமார், “நமது பிரதமர் மோடி அணிந்திருந்த Camo Tee டீ சர்ட் எஸ்சிஎம் கார்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - சென்னை சில்க்ஸ் குழுமத்தின் தயாரிப்பு ஆகும். இது எஸ்சிஎம்முக்கு மட்டும் பெருமையான தருணம் அல்ல திருப்பூருக்கு பெருமையான தருணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..ஸ்டாலினை பாராட்டிய எல்.முருகன்.. முகத்தை திருப்பிய பிரதமர் மோடி - அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு.!!

கரூர் அருகே காக்காவாடியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட் பாட்டில் கொண்டு மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த பிப்ரவரி மாதம் பார்லிமென்டில் பிரதமர் மோடி நீல நிறத்திலான ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.  இந்த ஜாக்கெட் வழக்கமான பருத்தி துணியால் செய்யப்பட்டது அல்ல. மாறாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் துணியால் தயாரிக்கப்பட்டது. 

அதோடு, இந்த உடை தமிழகத்தின் கரூர் அருகே உள்ள காக்காவடி பகுதியில் உள்ள ரெங்கா பாலிமர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த இந்திய எரிசக்தி வார விழாவில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட இந்த உடையை பிரதமர் மோடியிடம் வழங்கினர். 

இதைத்தான் பிரதமர் மோடி  பார்லிமென்ட்டுக்கு அணிந்து வந்திருந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி தமிழகத்தில் குறிப்பாக கொங்கு மண்டல தயாரிப்புகளை அணிந்து வருவது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆன கோயம்புத்தூர் நூல் ஆலைகளுக்கு பிரபலமானது. பிரதமர் மோடி அணிந்திருந்த திருப்பூர் ஆடை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?

இதையும் படிங்க..AIADMK : திருச்சி மாநாடு.. சசிகலா வராங்க.! ஓபிஎஸ் போட்ட புது ஸ்கெட்ச்..எடப்பாடி அணிக்கு ஆப்பு.?

click me!