
இந்திய நாட்டை இந்தி தேசமாக்கி ஒற்றுமையை குலைக்க வேண்டாம் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தி மொழி பயன்பாடு தொடர்பாக ப.சிதம்பரம் தலைமையில் பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு தனது சிபாரிசை கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.
அதில் குடியரசுத்தலைவர் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்தியிலேயே உரையாற்ற வேண்டும். பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடம் என்றும் சிபாரிசு செய்து இருந்தது.
இந்த சிபாரிசு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தற்போது ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து உடனடியாக இந்த சிபாரிசு அமலுக்கு வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய நாட்டை இந்தி தேசமாக்கி ஒற்றுமையை குலைக்க வேண்டாம் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய மண்ணின் சிறப்பு அம்சமே பன்முகத்தன்மை தான்.
பலவித பண்பாடு, மொழி, மதங்களை சேர்ந்தவர்கள் இடையிலான ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறது பா.ஜ.க.
ஆட்சிக்கு வந்த நாள் முதலே நாட்டின் ஒற்றுமையை சீர் குலைக்கும் முயற்சியை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.