
ஞாயிறு தோறும் பெட்ரோல் பங்குக்கு விடுமுறை அளிக்க பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்திருப்பதற்கு பெட்ரோலிய அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
தமிழகம் உள்பட மாநில பேங்க் உரிமையாளர்கள் மெய் 24 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் பெட்ரோல் பங்குக்கு விடுமுறை என தெரிவித்து இருந்தது.ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது பெட்ரோலிய அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, வெளியூர் செல்வோர் அல்லது அவசர நேரத்தில் பெட்ரோல் போட முடியாமால் மக்கள் அவதிப்படும் நிலை உருவானால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் பெட்ரோல் பேங்க் உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது .
இதனை தொடர்ந்து மே 24 ஆம் தேதி முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குக்கு விடுமுறை விடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.