
கன்னியாகுமரி
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பற்றி அறிந்து, அதை முறையாகப் பெற்று பயனடைய வேண்டும் என்றும் விவாசாயிகள் இந்த வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், இரண்டாம் கட்ட மனுநீதி நாள் முகாம் நடைப்பெற்றது. இதற்கு ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார்.
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கல்வித்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அப்போது அவர் பேசியது: "தமிழ்நாடு அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக அனைத்துத் துறைகளிலும் நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மக்கள், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பற்றி அறிந்து, அதை முறையாகப் பெற்று பயனடைய வேண்டும். குறிப்பாக, விவாசாயிகள் இந்த வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது.
கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாகவும், பெண்கள் முன்னேற்றத்தில் வளர்ச்சியடைந்ததாகவும் திகழ்கிறது. முதல்கட்ட முகாமில் 100 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 25 பயனாளிகளுக்கு நலிந்தோர் குடும்பநல நிவாரண உதவித் தொகையும், 15 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், தோட்டக்கலைத்துறை ஆகியவற்றின் மூலம், தலா 5 விவசாயிகளுக்கு முறையை ரூ.27 ஆயிரம் மதிப்பிலான விவசாய இடுபொருள்களும், மூலிகை தோட்டம் அமைகக் மூலிகைச் செடிகள், வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க காய்கறி விதைகளும் வழங்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.
இதில் நாகர்கோவில் கோட்டாட்சியர் இரா. ஜானகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) க. குணபாலன், இணை இயக்குநர் (வேளாண் துறை) பாண்டியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நல அலுவலர் பாவானி ஷிஜா,
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, தோவாளை வட்டாட்சியர் சுரேஷ் குமார், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஆ.வ.மூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.