தமிழக அரசு சார்பாக கொடுக்கப்படும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை பிச்சைக்காசு என பாஜக நிர்வாகி குஷ்பு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடைபெற்ற போராட்டத்தில் குஷ்புவின் உருவப்படத்தை எரிக்க முயன்ற போது திமுக பெண் எம்எல்ஏ சேலையில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உரிமை தொகை பிச்சை காசா.?
தமிழ்நாடு அரசு சுமார் 1.15கோடி மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்திட்டமாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் பாஜக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு, 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை பிச்சைக்காசு என விமர்சித்தார். மேலும் தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டுபோட்டு விடுவார்களா? என சர்ச்சையாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
undefined
குஷ்புவிற்கு எதிராக போராட்டம்
குஷ்புவின் பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்தநிலையில், மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெறும் இல்லதரசிகளை இழிவுவாக பேசிய பாஜகவின் நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்ட திமுக மகளிர் அணியினர் கலந்துகொண்டு நடிகை குஷ்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திமுக பெண் எம்எல்ஏ சேலையில் தீ
அப்போது குஷ்புவின் உருவ பொம்மையை எரிக்கும் முயற்சித்த போது சிவகங்கை நகர் காவல் துறையினர் மகளிர் அணி நிர்வாகிகளிடம் இருந்து உருவப் பொம்மையை மீட்டு அப்புறப்படுத்தினர். அப்பொழுது குஷ்புவின் புகைப்படத்தை எரிக்க முயற்சித்தனர். திமுக நிர்வாகி ஒருவர் அந்த புகைப்படத்தின் மீது தின்னரை ஊற்றினார். அப்பொழுது அருகில் இருந்த முன்னாள் அமைச்சரும், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசியின் சேலையில் தீ பற்றியது. இதனையடுத்து அருகிலிருந்த திமுக மகளிர் அணி நிர்வாகிகள் சேலையில் இருந்த தீயை உடனடியாக அனைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
1000 ரூபாய் பிச்சை காசா.? குஷ்புவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து போரட்டத்தில் இறங்கிய திமுக