தேர்தல் பத்திரத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், ஜனநாயகத்தின் மீதான சாமானியனின் நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
2018ம் ஆண்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தேர்தல் பத்திரம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், கார்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிடம் இருந்து கட்சிகள் தங்களுக்கான தொகையை பத்திரமாக பெற்று அதனை 15 நாட்களுக்குள் பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலை அமல் படுத்தப்பட்டது.
Explained: தேர்தல் பத்திரம் என்றால் என்ன? ஏன் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது?
இதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தேர்தல் பத்திரம் முறையை ரத்து செய்வதாக ஒருமனதாக வழங்கியிருக்கிறது.
தேர்தல் பத்திரம் ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு!
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவை என உச்சநீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது வெளிப்படையான தேர்தல் நடைமுறையையும், அமைப்பின் ஒழுங்கையும் உறுதிசெய்திடும். இந்தத் தீர்ப்பு மக்களாட்சியை மீட்டிருப்பதோடு அனைத்து அரசியல் கட்சிகளும் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது. மேலும் இது அமைப்பின் மீதான சாமானிய மனிதரின் நம்பிக்கையையும் காப்பாற்றியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.