அண்ணாமலையை கலாய்ப்பதற்காக திமுகவினர் செய்த ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் படத்தை ஒரு ஆட்டின் கழுத்தில் மாட்டி, படத்தோடு சேர்த்து ஆட்டை வெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. தேர்தல் வெற்றியைக் கொண்டாட திமுகவினர் செய்த இந்தச் சம்பவத்துக்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு இடத்தில் பேசிய அவர், பிரியாணி சமைத்தாலும் ஆட்டுக்குட்டியை கொடுமைப்படுத்தாமல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கோவையில் திமுக டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் சவடாலாகப் பேசி இருந்தார்.
undefined
கோவையில் திமுக வெற்றிக்குக் கடுமையாக உழைத்த தமிழகத் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக வெற்றி பெற்றதும் கோவை மக்களுக்கு ஆடு வெட்டி மட்டன் பிரியாணி போடுவோம் என்று அறிவித்தார்.
மிகக் குறைந்த வயதில் எம்.பி.யான இளம் பெண்கள்! வெறும் 25 வயதில் மக்கள் மனதை வென்று சாதனை!
இந்நிலையில், ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார். திமுகவை எதிர்த்துக் களத்தில் நின்ற அண்ணாமலை 1,18,068 வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துவிட்டார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்று 3வது இடம் பிடித்தார்.
கோவையில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், திமுகவினர் அண்ணாமலையை கொடுமையாக கலாய்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கோவை கோட்டைமேடு பகுதியில் திமுகவினர் மட்டன் பிரியாணி சமைத்து பொதுமக்களுக்கு விநியோகித்தனர். பிரியாணி வழங்கும்போது அருகில் சில ஆடுகளையும் திமுகவினர் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், அண்ணாமலையை கலாய்ப்பதற்காக திமுகவினர் செய்த ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் திமுகவினர் பட்டப்பகலில், நடுரோட்டில் வைத்து ஒரு ஆட்டை வெட்டுகின்றனர். ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை படத்தை மாட்டிவிட்டு, அந்தப் படத்தையும் சேர்த்து ஒரே வெட்டாக வெட்டுகின்றனர். ரத்த வெள்ளத்தில் ஆடு துடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. மட்டன் பிரியாணி செய்வதற்காக ஆட்டை வெட்டியபோது வீடியோ எடுத்ததாகக் என்று கூறப்படுகிறது.
இந்த வீடியோவை அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆட்டை வெட்டுவது போல அண்ணாமலையை வெட்டிக் கொல்வோம் என்னும் அர்த்தத்தில் இந்த வீடியோவை திமுகவினர் பகிர்கின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். இதைப் போல முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டோவை வைத்துச் செய்தால் அமைதியாக இருப்பார்களா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
மோடி பதவியேற்பு விழாவுக்கு அண்டை நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு! யாரு வாராங்க தெரியுமா?