தூத்துக்குடி இளைஞர்களுக்காக “புத்தொழில் களம்” என்ற புதிய முன்னெடுப்பை திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தொடங்கியுள்ளார். சிறந்த மூன்று திட்டங்களுக்கு ₹10 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கப்படும். 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம்.
புத்தொழில் களம் புதிய முன்னெடுப்பை தொடங்கி உள்ளதாக தூத்துக்குடி எம்.பியும், திமுகவின் துனை பொது செயலாளருமான கனிமொழி அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தூத்துக்குடி இளைஞர்களுக்காக “புத்தொழில் களம்” என்ற தலைப்பில் ஒரு புதிய முயற்சியை துவங்கியுள்ளோம்! இளைஞர்களின் திறமையை ஊக்குவித்து, சமூக மாற்றத்திற்காக புதிய திட்டங்களை உருவாக்கும் ஓர் முன்முயற்சி.
சிறந்த மூன்று திட்டங்களுக்கு ₹10 லட்சம் வரையிலான நிதியுதவி! 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம்.
மூக மேம்பாட்டிற்காக உங்கள் யோசனைகளை செயல்படுத்தும் சிறந்த வாய்ப்பு! இப்போதே பதிவு செய்ய QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் வணக்கம்,
தூத்துக்குடி இளைஞர்களுக்காக “புத்தொழில் களம்” என்ற தலைப்பில் ஒரு புதிய முயற்சியை துவங்கியுள்ளோம்!
இளைஞர்களின் திறமையை ஊக்குவித்து, சமூக மாற்றத்திற்காக புதிய திட்டங்களை உருவாக்கும் ஓர் முன்முயற்சி.
🔹சிறந்த மூன்று திட்டங்களுக்கு ₹10 லட்சம் வரையிலான… pic.twitter.com/tf8wnHACvB
மேலும் இந்த திட்டம் தொடர்பாக முழு விவரங்களை வீடியோவாகவும் பதிவிட்டுள்ளா. அந்த வீடியோவில் பேசிய கனிமொழி “ புத்தொழில் களம் என்ற திட்டத்தின் மூலம் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் சமூக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கவும், தூத்துக்குடியில் உள்ள இளம் தொழில் முனைவோருக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி தரவும் இந்த திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். இளைஞர்களே சமூக மாற்றத்தின் உந்து சக்தி. இந்த சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரச்சனைகளை உங்களின் சமூக ஸ்டார்ட் அப் மூலம் குறைக்க முடியும் என்றால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆளுநர் பதவி நீக்கம் உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள்! முழு விவரம் இதோ!
18 – 35 வயதுக்குட்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த இளம் தொழில் முனைவோர், இந்த முயற்சியில் பங்கேற்கலாம். இது ஒரு போட்டி அல்ல, ஒரு வாய்ப்பு. தூத்துக்குடியில் மட்டுமல்லாமல், இந்த சமூகத்தில் இருக்கும் பல்வேறு விஷயங்களை உங்கள் பார்வையில் நீங்கள் எப்படி மாற்ற நினைக்கிறீர்கள் என்பதற்கு ஒரு வாய்ப்பாக, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சி.! தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு
தேர்ந்தெடுக்கப்படும் 3 திட்டங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும். நிதியுதவி உடன் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கி தரக் கூடிய இந்த முயற்சியில் நீங்களும் பங்கெடுத்து கொண்டு சமூகத்தை மாற்றுங்கள்..” என்று தெரிவித்துள்ளார்..