மாதவரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம்..? சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ திடீர் கோரிக்கை

By Ajmal KhanFirst Published Mar 23, 2023, 2:19 PM IST
Highlights

சென்னையை அடுத்த மாதவரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாதவரம் தனி மாவட்டம்

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கடந்த 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று காலை நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது. முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் சட்டமசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதனையடுத்து ஆளுநருக்கு இன்றே சட்டமசோதா அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதனையடுத்து வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத் பேசிய மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் , மாதவரம் திருவொற்றியூர் பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மாதவரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உருக்கமாக பேசிய முதல்வர்.. மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா..!

மாதவரத்தில் மெட்ரோ ரயில்

இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், மாதவரம் முதல் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாதவரம் பால் பண்ணைக்கு சொந்தமான இடத்தில் மினி டைட்டில் பார்க் அமைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மாதவரம் புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா முதல் சோழவரம் சுங்கச்சாவடி வரை போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய சுதர்சனம்,  இதனை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார் . மேலும் மாதவரம் தொகுதியில் மூலிகை ஆராய்ச்சி மையம் அமைத்திட வேண்டும் எனவும் அரசு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ்க்கு சட்டசபையில் பேச வாய்ப்பு..! எதிர்த்த இபிஎஸ்.! வேட்டியை மடித்து கொண்டு ஆவேசமடைந்த மனோஜ் பாண்டியன்

click me!