Kanyakumari : கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் முருகன் ஆலயத்தில் நடந்த தேரோட்டம் ஆகம விதிமுறைகளை மீறி அமைச்சரின் சர்வாதிகார போக்கில் நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற முருகன் ஆலயமான குமாரகோவில் வேளிமலை முருகன் ஆலய தேரோட்டம் இன்று காலை துவங்கியது. மிகவும் பாரம்பரியமான இந்த ஆலயத்தின் தேரின் வடத்தை இந்து மத சம்பிரதாயங்களை கடைபிடிப்பவர்கள் தவிர மற்றவர்கள் பிடிக்கக்கூடாது என்று இந்துக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவரான மனோ தங்கராஜ் எந்த அடிப்படையிலும் தேரின் வடத்தை பிடிக்கக்கூடாது என்று இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தேரோட்ட நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் எதிர்ப்பு தெரிவித்த இந்துக்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்துக்களை சார்ந்தவர்கள் தேரை வடம்பிடித்து இழுப்பார்கள் என்று கூறி தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைப்பதற்கு வந்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், இந்துமுன்னணி கோட்ட பொறுப்பாளர் மிசா சோமன், ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் ராஜேந்திரன், விஷ்வ இந்து பரிஷத் பொறுப்பாளர் காளியப்பன் நூற்றுக்கு அதிகமான பாஜக மற்றும் ஹிந்து இயக்க பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் முருகன் ஆலயத்தில் நடந்த தேரோட்டம் ஆகம விதிமுறைகளை மீறி அமைச்சரின் சர்வாதிகார போக்கில் நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘அருள்மிகு வேளிமலை குமாரகோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி தேரோட்டம் இன்று சனிக்கிழமை, காலை 08. 00 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை சட்டத்திற்கும், ஆகம விதி முறைகளுக்கும் முரணாக தமிழக கிறிஸ்தவ அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அவருடன் வந்த மாற்று மத குண்டர்களும், பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து பல்லாயிரக்கணக்கான காவல்துறையினரை பயன்படுத்தி பக்தர்களை மிரட்டி வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்கள்.
எதிர்ப்பு தெரிவித்த அனைத்து இந்து இயக்க பொறுப்பாளர்களையும், பக்தர்களையும் காவல்துறை பலவந்தமாக கைது செய்ததது. அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் சர்வாதிகார போக்கையும் அதற்கு முழுமையாக துணையாக இருந்து நீதிக்காக போராடிய இந்து இயக்க பொறுப்பாளர்களையும், பக்தர்களையும் கைது செய்த காவல்துறையையும், உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Ration Shop : குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! இனி கவலையில்லை மக்களே !!
இதையும் படிங்க : Seeman : திமுக ஊழல் ஓகே.. அதிமுக ஊழலை எப்போ பேசுவீங்க அண்ணாமலை ? சீமான் அதிரடி பேட்டி!