அமித்ஷா கண்ணில் படும்வரை ஷேர் செய்யுங்க..! நீ ஒதுங்கன ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர்டா.. கொக்கரிக்கும் உபிஸ்

Published : Aug 17, 2025, 10:51 AM IST
Tamilnadu

சுருக்கம்

தனது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினரை திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி சிரித்த முகத்துடன் கைகுலுக்கி வழியனுப்பி வைத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ED Raids DMK Minister I. Periyasamy House: தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிகாலை முதல் தீவிர சோதனை நடத்தினர். சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில், அவரது வீடு, ஐ.பெரியசாமியின் மகனும், பழனி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி. செந்தில்குமாருக்கு சொந்தமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதேபோல் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது.

ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மொத்தம் 6க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதல் இரவு வரை பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அமலாக்கத்துறையின் சோதனைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டு முன் திமுக தொண்டர்கள் குவிந்து அமலாக்கத்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அங்கு திமுக தொண்டர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமலாக்கத்துறைக்கு திமுக கண்டனம்

''எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்க மத்திய பாஜக அரசு அமலாகத்துறையை பயன்படுத்துகிறது. பாஜகவின் உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் பயப்படும் இயக்கம் திமுக அல்ல'' என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் தெரிவித்துள்ளனர். . அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு செய்த உடன் அமைச்சர் ஐ பெரியசாமி அமலாக்கத்துறை அதிகாரிகளை சிரித்த முகத்துடன் கை கொடுத்து அனுப்பி வைத்தார்.

சிரித்த முகத்துடன் கைகுலுக்கிய திமுக அமைச்சர்

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பொதுவாக தங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர், அமலாக்கத்துறைனர் சோதனை நடத்தும்போது அரசியல்வாதிகள் இறுக்கமான முகத்துடன் இருப்பார்கள். ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று சிரித்த முகத்துடன் இருந்தார். சோதனை முடிந்தவுடன் ரொம்ப கூலாக அவர் சிரித்த முகத்துடன் அமலாக்கத்துறை அதிகாரிகளை வழியனுப்பி வைத்தார்.

அமித்ஷா கண்ணில் படும்வரை ஷேர் செய்யுங்க

இந்த புகைப்படத்தை திமுகவினர் வைரலாக்கி வருகின்றனர். ''இது தான் திமுக. நாங்கள் எதற்கும் அஞ்சுகிற, அடிபணியும் இயக்கம் அல்ல. அமித்ஷா கண்ணில்படும் வரை இந்த புகைப்படங்களை ஷேர் செய்யுங்கள்''' என்று சமூகவலைத்தளங்களில் கொக்கரித்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்