திமுக ஏன் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை? உ.பி.யின் கேள்விக்கு ஆ. ராசா பதில்!

Published : Oct 20, 2025, 04:59 PM IST
A Raja on Diwali Wishes

சுருக்கம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, தங்கள் கட்சி ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை என விளக்கியுள்ளார். கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகள் வரலாற்று நபர்களுடன் தொடர்புடையவை என்றும், தீபாவளியின் கதை பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக சார்பில் தீபாவளி பண்டிகைக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கப்படுவதில்லை என்பது குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் திமுக இளைஞர் அணியின் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவரிடம், கட்சித் தொண்டர் ஒருவர், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தி.மு.க., இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு அவர் மேடையில் அளித்த விரிவான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்வது ஏன்?

தன் பதிலில் ஆ. ராசா கூறியதாவது: "கிறிஸ்துவ மதம் ஒருவரால் முன்மொழியப்பட்டது. ஏசு கிறிஸ்து தோன்றியதற்கு வரலாறு மற்றும் ஆதாரங்கள் இருக்கிறது. அவர் சொன்ன போதனைகள் இன்றும் நடப்பில் உள்ளன. அதேபோல, இஸ்லாம் மதத்திலும் இறைத்தூதர் முஹம்மது நபி தோன்றியதற்கும் வரலாற்று ஆவணங்கள் உள்ளன. அவர்கள் இருவரும் பிறந்தது உண்மை. அது சரித்திர நிகழ்வு. அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கு வாழ்த்து சொல்வது மனிதநேயம். அது நியாயமானது.

 

 

தீபாவளி வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?

ஆனால், தீபாவளி கொண்டாடப்படுவதற்கு காரணமாகச் சொல்லப்படும் கதை, 'பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக' உள்ளது.

'பூமாதேவி என்கிற பூமியை, பத்மாசுரன் என்ற அசுரன் ஒரு பாயாகச் சுருட்டி, சமுத்திரத்திற்குள் பதுக்கி வைத்துவிட்டானாம். உடனே தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டார்கள். விஷ்ணு ஒரு பன்றி உருவம் எடுத்து கடலுக்குள் போய் பூமாதேவியை மீட்கிறார். அப்போது அந்த பூமாதேவிக்கும் பன்றிக்கும் காதல் ஏற்பட்டு, அவர்களுக்குப் பிறந்தவன்தான் நரகாசுரன். அந்த நரகாசுரன் தேவர்களுக்கு எதிராக இருந்ததால், அவனை வதம் செய்து எதிர்த்தார்கள். இதுதான் கதை’ என்று கூறப்படுகிறது.

ஆ. ராசாவின் விமர்சனம்

"தீபாவளிக்கு எப்படி வாழ்த்து சொல்வது? இந்த உலகத்தைப் பாயாகச் சுருட்ட முடியுமா? விஷ்ணு பன்றி அவதாரம் எடுக்க முடியுமா? பன்றியும் பூமாதேவியும் உறவு கொண்டு ஒரு அசுரனைப் பெற்றெடுக்க முடியுமா? இதுதான் வரலாறு என்று வாழ்த்து சொல்ல முடியுமா?" என ஆ. ராசா கேள்வி எழுப்பினார்.

மேலும், புரூனோ முதல்முதலில் பூமி உருண்டையானது என்று கூறியபோது அதை ஏற்காத கிறிஸ்தவ மதம், சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்குச் சிலை வைத்து உலக மக்களிடம் மன்னிப்புக் கோரியதை சுட்டிக்காட்டிய அவர், "அறிவியலுக்கு எதிராக இருக்கிற காரணத்தினால்தான், பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்கிற காரணத்தினால்தான் இந்து பண்டிகைகளுக்கு நாம் (தி.மு.க.) வாழ்த்து சொல்வது இல்லை" என்று தனது விளக்கத்தை முடித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!