மக்களே... 505 ல 364 வாக்குறுதிகளை நிறைவேற்றிட்டோம்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Published : Sep 02, 2025, 07:09 PM IST
Mk Stalin

சுருக்கம்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 364 நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், முழுமையாக நிறைவேற்றப்பட்டவை 66 மட்டுமே என்று கூறியுள்ளார்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

"தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், நமது திராவிட மாடல் அரசு இதுவரை 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. மேலும், 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளன. இது குறித்த தகவல்களைத் தக்க தரவுகளுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவ சங்கர் மற்றும் கோவி செழியன் ஆகியோர் விளக்கினர்."

"இதைவிட ஒருபடி மேலே சொன்னால், தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் இதற்கு உதாரணம். இவை இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் ஆகும்."

"கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனை போன்ற பல தடைகளைத் தாண்டி, நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றியுள்ளோம்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு:

கடந்த வாரம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், "விடியல் எங்கே?" என்ற பெயரில் ஆவணப் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், முழுமையாக நிறைவேற்றப்பட்டவை 66 மட்டுமே. அரைகுறையாக நிறைவேற்றப்பட்டவை 66. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் 373 உள்ளன" என்று தெரிவித்திருந்தார்.

மேலும், "98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் பொய் பிரச்சாரம் செய்கிறார்" எனவும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்ததார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!