பிரச்சாரத்தில் கிழே விழுந்து கால் முறிவு..! ஊண்டுகோளோடு தேர்தல் களத்தில் இறங்கிய தமிழச்சி தங்கபாண்டியன்

By Ajmal KhanFirst Published Mar 26, 2024, 3:32 PM IST
Highlights

பிரச்சாரத்தின் போது தவறி கீழே விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, ஊன்றுகோலுடன் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் பிரச்சாரம் மேற்கொண்டார். 

பிரச்சாரத்தில் கீழே விழுந்த தமிழச்சி

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், திமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தீவிரமாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், தேர்தல் பணிமனைகளும் திறக்கப்பட்டு வருகிறது.

 இந்தநிலையில் தென் தென்னை திமுக வேட்பாளர் பணிமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது கால் தடுக்கி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கீழே விழுந்தார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், 3 வாரத்திற்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஊண்டுகோளாடு பிரச்சாரம்

இருந்த போதும் தேர்தல் பிரச்சாரத்திற்காக காலில் கட்டோடு களத்தில் இறங்கியுள்ளார். தனியாக நடக்க முடியாக காரணத்தால் கையில் ஊண்டுகோள் மூலம் நடந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது நாற்காழியில் அமர்ந்தே பேசி வருகிறார். இந்தநிலையில் இன்று தென்மேற்கு மாவட்டம் மயிலை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மயிலை கிழக்குபகுதியில் இருந்து இரண்டாவது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன், நேற்று வேட்பாளர் பணிமனை கட்டிடம் திறக்கும் பொழுது தடுமாறி கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மூன்று வாரம் ஓய்வெடுக்க சொல்லி இருந்தார்கள் ஆனாலும் தேர்தல் நேரம் என்பதால் ஓய்வு எடுக்காமல் பிரச்சார பணிகளை தொடங்கி இருக்கிறோம் எனக் கூறினார்.

invisible ஆளுநர்தான் தமிழிசை

நேற்று சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் பிரச்சாரத்தை தொடங்கினோம். செல்லும் இடங்கள் எல்லாம் குடும்பத் தலைவிகள், பெண்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள். தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு சென்னையை பொறுத்த வரை மழைநீர் வடிகால் பணிகள் முறையாக செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு சில குற்றச்சாட்டுகள் மட்டும் மக்கள் முன் வைக்கிறார்கள். அவையும் உடனடியாக தீர்க்கப்படும் என தெரிவித்தார்.தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தாராஜன் சென்னையின் invisible நபர்தான் தமிழச்சி தங்கப்பாண்டியன் என தெரிவித்தது குறித்தான கேள்விக்கு  தமிழ்நாட்டின் invisible ஆளுநர்தான் தமிழிசை சௌந்தரராஜன் எனவும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்ய தேவை இல்லை எனவும் கூறினார்.

இதையும் படியுங்கள்

Annamalai : அரசியலில் விடுமுறை எடுத்ததே இல்லை.. எங்க அம்மாவ பார்த்து இரண்டு மாசம் ஆச்சு- அண்ணாமலை

click me!