செந்தில் பாலாஜியை பயன்படுத்தி அனுதாப ஓட்டுக்கு குறி வைக்கும் திமுக, காங்கிரஸ் கூட்டணி; வைரலாகும் பாடல்

By Velmurugan s  |  First Published Apr 8, 2024, 7:31 PM IST

கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டுள்ள "எங்க செந்தில் பாலாஜி - தங்க பாலாஜி" என்ற சென்டிமென்ட் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து டிடிவி தினகரன் அணியில் இடம் பெற்ற செந்தில் பாலாஜி, நாளடைவில் திமுகவில் ஐக்கியமானார். திமுகவில் இணைந்தவுடன் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்று வெற்றியும் அடைந்தார். அதன் பின்னர் அவருக்கு முக்கிய துறைகளில் ஒன்றான மின்வாரியம், மதுவிலக்கு ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

Latest Videos

undefined

இந்நிலையில், முந்தைய அதிமுக அமைச்சரவையலி் போக்குவரத்துக் கழக பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறி, அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.

வடலூர் வள்ளலார் ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க கடும் எதிர்ப்பு; தீடீ போராட்டத்தால் தொடர் பதற்றம்

கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட செந்தில் பாலாஜி, அரசியலில் படிப்படியாக வளர்ந்து உச்சத்தை தொட்டவர். இந்த நிலையில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உருக்கமான பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த பாடலில், ஸ்டாலின் இதயத்தில் நீ நிலைத்திருப்பாய், உதயாவின் நிழலாக சிலிர்த்தெழுவாய், நீ சிங்கம் போல வருவாய், கடல் சீற்றம் போல எழுவாய், சொக்கத்தங்கம் போல ஜொலிப்பாய், என்ற வரிகளுடனும்.

பலமுறை கேப்டனுடன் வந்த நான் முதல் முறையாக தனியாக வந்துள்ளேன்; பண்ருட்டியில் கண் கலங்கிய பிரேமலதா

எங்கள் கொங்கு நாட்டு சிங்கம், மக்கள் மனசெல்லாம் நிறைந்திருக்கும் மகராசனே, வெற்றி எப்போதும் நம் பக்கம் வா ராசாவே, என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், உன் வியர்வை வெற்றி கூற, அதை தடுக்க சிறைச்சாலை என்பது போன்ற வரிகளும் இந்த 5 நிமிடம் 30 நொடிகள் ஓடக்கூடிய பாடலில் இடம்பெற்றுள்ளது.

click me!