வடலூர் வள்ளலார் ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க கடும் எதிர்ப்பு; திடீர் போராட்டத்தால் தொடர் பதற்றம்

By Velmurugan sFirst Published Apr 8, 2024, 4:00 PM IST
Highlights

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க அரசு தோண்டிய பள்ளத்தில் அப்பகுதி மக்கள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இந்த சத்திய ஞான சபை 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நிலையில், அதில் சர்வதேச மையம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சர்வதேச மையம் அமைப்பதற்கு கடந்த மாதம் பணிகள் துவங்கின. ஆனால், அரசின் இந்த முடிவுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பலமுறை கேப்டனுடன் வந்த நான் முதல் முறையாக தனியாக வந்துள்ளேன்; பண்ருட்டியில் கண் கலங்கிய பிரேமலதா

இதனிடையே கட்டிடம் கட்டுவதற்கு இன்று பள்ளம் தோண்டப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு ஒன்று கூடினர். மேலும் அந்த பள்ளத்தில் இறங்கி பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்திய ஞான சபை பெருவெளியில் இந்த மையம் அமைக்க கூடாது எனவும், அரசு இடத்தில் அமைக்க கோரியும் போராட்டம் நடைபெறுகிறது.

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிப்பு; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் தினத்தன்று பல லட்சம் பேர் கூடும் இந்த இடத்தில் சர்வதேச மையம் மையம் அமைத்தால் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் தற்பொழுது போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

click me!