குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய இயற்றும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது போன்று அதனை நடைமுறை படுத்தும் அதிகாரம் மாநில அரசிடம் தான் அதிகம் உள்ளது என எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் தனக்கு உரிய அதிகாரத்தோடு தமிழகதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2 நாட்களில் வேட்பாளர் பட்டியல் - பாஜக துணைத்தலைவர்
ஒரு சட்டத்தை இயற்றும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கலாம், ஆனால் அதனை எப்படி செயல்படுத்துவது, செயல்படுத்தலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க மாநில அரசுக்கே அதிக அதிகராம் உள்ளது. அப்படி செய்ய முடியாது என அண்ணாமலை சொல்கிறார். அவர் இருக்கின்ற இடத்தின் அடிப்படையில் அப்படி பேசுகிறார். ஆனால் அதனை நாங்கள் செய்து காட்டுவோம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் கட்டண படுக்கையறை - அமைச்சர் தகவல்
இரு மொழி திட்டத்தை அறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துகிற போது நாடாளுமன்றம் இயற்றிய மொழி தொடர்பான சட்டத்தை, தீர்மானத்தை இந்த மன்றம் நிராகரிக்கிறது என்று சொல்லி தீர்மானம் நிறைவேற்றினார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.