கவனத்திற்கு !! அரசு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.. உடனே முந்துங்கள்..

By Thanalakshmi VFirst Published Sep 21, 2022, 10:43 AM IST
Highlights

தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் தீபாவளிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
 

நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மீண்டும் ஏராளமானோர் அலுவலகத்திற்கு பணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் இந்தாண்டு தீபாவளி பண்டிகையொட்டி லட்சகணக்கான மக்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை பொருத்தவரை சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடத்திலேயே முடிவடைந்தது. இதனால் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய லட்சக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர்.

மேலும் படிக்க: நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டல்களில் திடீர் ரெய்டு... பின்னணி என்ன?...

இந்நிலையில் தமிழக அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பண்டிக்கைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. ஒரு மாதத்திற்கு முன்பு பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கும் நிலையில், அக். 21 ஆம் தேதி பயணம் செய்வோருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. 

அதே போல் அக்.22 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளையும், அக.23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்கவுள்ளது. மேலும் தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு குறித்து விரைவில் அதிகார அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க:ஓட்டப்பிடாரம் அருகே தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

click me!