குடிமகன்களுக்கு குதூகல போட்டி... ரூ.1000க்கு சரக்கு அடித்தால் எல்இடி டிவி பரிசு!

Published : Nov 05, 2018, 03:36 PM IST
குடிமகன்களுக்கு குதூகல போட்டி... ரூ.1000க்கு சரக்கு அடித்தால் எல்இடி டிவி பரிசு!

சுருக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ.1000க்கு சரக்கு அடித்தால், எல்இடி டிவி, ஏசி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என தனியார் மதுபார் அறிவித்தது. இதற்கான பேனரையும் வைத்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அதிமுக பிரமுகர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி வல்லப தெரு மற்றும் அக்ரஹாரம் தெருவில் 3 விளம்பர பேனர்கள் இருந்தது. அதில், The Mount Rivera The Business Class Hotel With Barல், ரூ.1000க்கு மேல் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி, வாஷிங் மெஷின், ஏசி ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

தகவலறிந்து ஜாம்பஜார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பேனர்களை அகற்றினர். மேலும், பால் மேலாளர் வின்சென்ட் ராஜ், பார் உரிமையாளரின் உதவியாளர் ரியாஸ் அகமது ஆகியோரை கைது செய்தனர். 

மேலும், பாரில் இருந்த எல்இடி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், குலுக்கல் பெட்டி, ஆகியவை பறிமுதல் செய்தனர். பார் உரிமையாளர் முகமது அலி ஜின்னா, முன்னாள் கவுன்சிலர் மற்றும் அதிமுக சிறுபான்மையினர்பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் மஜாவாக நடந்த பாலியல் தொழில்! உள்ளே புகுந்த போலீஸ்.. அந்த கோலத்தில் இருந்த பெண்கள்
பிராட்வே பேருந்து நிலையம் மூடல்.. ராயபுரம், தீவுத்திடலில் இயக்கப்படும் பஸ்களின் முழு விவரம்.. வெளியான முக்கிய அறிவிப்பு