விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி... டிக்கெட் முன் பதிவில் தள்ளுமுள்ளு!

Published : Nov 05, 2018, 01:12 PM IST
விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி... டிக்கெட் முன் பதிவில் தள்ளுமுள்ளு!

சுருக்கம்

ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. இதை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடப்பில் சர்க்கார் திரைப்படம் நாளை வெளியாகிறது. இதையொட்டி அனைத்து தியேட்டர்களிலும், முன்பதிவு தொடங்கிவிட்டது. இதையொட்டி, விஜய் ரசிகர்கள், அதிகாலையிலேயே தியேட்டர்களில் தவம் இருந்து டிக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர். 

இந்நிலையில், சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள விக்னேஷ்வரா தியேட்டரில் சர்கார் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று நடந்தது. திரையரங்கில் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக திரண்டனர். 

ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. இதை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!