தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? இன்று முதல் ஜூலை 15 வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!

Published : Jul 12, 2023, 08:00 AM ISTUpdated : Jul 12, 2023, 10:40 AM IST
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? இன்று முதல் ஜூலை 15 வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!

சுருக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூலை 12) தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூலை 12) தொடங்குகிறது.

தீபாவளியை முன்னிட்டு ரயில் பயணிகள் வசதிக்காக 120 நாள்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி வழங்கிவருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நவம்பர் 9ஆம் தேதி ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

வாங்கத் தூண்டும் விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர்! டாடா பஞ்ச்க்கு சவால் விடும் அதிரடி அறிமுகம்!

இதேபோல, நவம்பர் 10ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 13ஆம் தேதி முதலும், நவம்பர் 11ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 14ஆம் தேதி முதலும், நவம்பர் 12ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 15ஆம் தேதி முதலும் முன்பதிவு செய்யலாம் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

இன்று தீபாவளி பயணத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்குவதால், ரயில் நிலையங்களில் அதிகாலை முதலே பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், காலை 8 மணிக்குத் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரயில்களில் இருக்கைகள் நிரம்பிவிட்டன. வரிசையில் நின்றிருந்த பலருக்கும் காத்திருப்புப் பட்டியலில்தான் இடம் கிடைத்துள்ளது.

தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் டிக்கெட் புக் செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இணையத்தின் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதியை பயன்படுத்தி அதிகமானவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதால் நேரில் வந்து முன்பதிவு செய்பவர்களில் குறைவான நபர்களுக்கே டிக்கெட் கிடைக்கிறது என்று கூறுகின்றனர். மேலும், பண்டிகை காலங்களில்  தென்மாவட்டங்களுக்குச் செல்ல கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் வட மாநிலங்களில் ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு

PREV
click me!

Recommended Stories

மற்றவர்களின் மதம், மொழியை மதியுங்கள்.. நீலகிரியில் மாணவர்களிடம் மனம்திறந்த ராகுல் காந்தி!
லாட்டரி லீமா ரோஸின் 'மாஸ்டர் பிளான்': எடப்பாடியிடம் போட்ட டீல்..? அதிரும் அரசியல் களம்..!