மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல்காந்தி நிகரான தலைவர் இல்லை என கார்த்தி சிதம்பரம் பேசியிருந்த நிலையில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு கிளம்பிய காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு
கார்த்தி சிதம்பரம் சர்ச்சை கருத்து
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதரம்பரம், பல்வேறு சர்ச்சை கருத்துக்கு சொந்தக்காரார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல்காந்தி நிகரான தலைவர் இல்லை என கூறியிருந்தார். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை எனவும் கார்த்தி சிதம்பரம் பேசியிருந்தார். இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே ஆர் ராமசாமி தலைமையில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூட்டம் நடந்தது.
ராகுலா.? மோடியா.?
ராகுல் காந்தி தொடர்பாக கார்த்தி சிதம்பரம் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியதாகவும், தேசிய தலைமைக்கு இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்ததாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பின்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்த குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஒழுங்கு நடவடிக்கை இக்குழுவின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றதாகவும், கட்சி உள்விவாரங்களை வெளியில் சொல்ல மாட்டோம் என தெரிவித்தார். கார்த்தி சிதம்பரம் தொடர்பான கேள்விக்கு அவரிடமே கேள்வி கேளுங்கள் என கூறினால்,
ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை
தொடர்ச்சியாக செய்தியாளர்கள் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க என்ன தயக்கமா என்ற கேள்விக்கும் அவர் கொடுத்த விளக்கம் என்ன என்ற கேள்விக்கும் இரு கையைக் கூப்பியவாறு செய்தியாளர் சந்திப்பில் இருந்து கிளம்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஒரு தலைவர் மற்றும் நான்கு துணை தலைவர்கள் என ஐந்து பேர் உள்ளனர். இந்நிலையில் 4 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில், மற்றொரு உறுப்பினரான பழனிச்சாமி தனது எதிர்ப்பை பதிவு செய்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருக்கு அவர் கடிதமும் அனுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்
மோடி - ராகுல் ஒப்பீடு: கார்த்தி சிதம்பரத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ்!