ஐந்து நாட்களுக்கு நீலகிரி போகாதீங்க... எச்சரிக்கை விடுக்கும் பேரிடர் மேலாண்மை ஆணையம்!! | TamilnaduFlood

By Narendran SFirst Published Nov 12, 2021, 5:35 PM IST
Highlights

#TamilnaduFlood | நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்பதால் நவம்பர் 13,14,15,16 ஆகிய ஐந்து நாட்கள் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்பதால் நவம்பர் 13,14,15,16 ஆகிய ஐந்து நாட்கள் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. அதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர கடலோர பகுதி முதல் குமரி கடல் பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ஆந்திர கடலோர பகுதி முதல் குமரி கடல் பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் பெரம்பலூர், திருச்சி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகமான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பெய்து வரும் கனமழையினை தொடர்ந்து, பேரிடர் மேலாண்மை துறை பொதுமக்கள் கீழ்க்கண்ட  சில அறிவுரைகளை பின்பற்றுமாற்று கேட்டுக்கொண்டுள்ளது.  அதன்படி, அவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளின் அருகில் செல்வதையும், செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் குளங்களில் குளிக்க செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினைக் கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேவையில்லாமல் மின்கம்பங்களின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருவதாகவும் இதனால் நவம்பர் 13,14,15,16 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்பதால் நவம்பர் 13,14,15,16 ஆகிய ஐந்து நாட்கள் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கனமழை, நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. மலை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கும் சூழல் நிலவு உள்ளதால் மக்களின் நலன் கருதி பேரிடர் மேலாண்மை துறை இத்தகைய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!