
ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தையே தமிழக விவசாயி அய்யாகண்ணுவை திரும்பி பார்க்கும் இந்த வேளையில் இயக்குனர் கவுதமன் கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்ட சம்பவம், தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பயிர்க்கடன், வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யா கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் இன்று 30வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.
அரசும், அரசு நிர்வாகமும் தங்களை திரும்பி பார்க்க வேண்டும் என விதவிதமான போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறார் அய்யாகண்ணு. இதன் மூலம் ஒட்டு மொத்த விவசாயிகளின் சூப்பர் ஹீரோ என ஆகிவிட்டார்.
ஆரம்பத்தில், விவசாயிகளின் குறைகளை நிறைவேற்றுவதற்காக, அரசு குறைத்தீர் கூட்டங்களில் அரை நிர்வாணத்தோடு சென்று கவனத்தை ஈர்த்து வந்தார். அது பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை.
எனவேதான், தற்போதைய போராட்டத்தில், தினம் தினம் ஒரு வித்தியாசமான போராட்டங்களை நடத்தி வருகிறார்.
அதில் எலிக்கறி சாப்பிடுவது, அரை நிர்வாணம், முழு நிர்வாணமாக சாலையி ஓடி மக்களையும், அரசையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது, பாதி தலைமுடி, பாதி மீசையை மழிப்பது போன்ற போராட்டங்களை நடத்தி வருகிறார்.
பொதுவாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் போராட்டங்கள் நடத்துவதற்க இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும. அங்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த அரசு சார்பில கொடுக்கப்பட்டுள்ள நடைமுறை.
ஆனால், தற்போதோ, இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்ற ரீதியில், போராட்டங்களை வேறு கோணங்களில் கொண்டு சென்றுவிட்டனர் போராட்டக்காரர்கள். அந்த வகையில்தான் சினிமா இயக்குனர் கவுதமன், இன்று செயல்பட்டுள்ளார்.
விவசாயிகளுக்காக போராட்டத்தில் குதித்துள்ள அய்யாகண்ணுவின் ஸ்டைலில், கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தை தொடங்கிவிட்டார்.
சங்கிலி மூலம் பூட்டை போட்டு, அரசின் கவனத்தை திசை திருப்பியதோடு, பல்லாயிரக்கணக்கான மக்களையும் அவதிக்கு ஆளாக்கிவிட்டார்கள்.
மக்களின் கோரிக்கைகளுக்காக பெருகி வரும் போராட்டங்களால், பாதிக்கப்படுவதோ மக்கள் மட்டுமே. காலை வேளையில் வேலைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டனர். நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கும் வழியில்லாமல், ஆனது.
இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், பொதுமக்கள் பாதிப்பது வாடிக்கையாகிவிட்டது. சென்னை மக்கள் நிம்மதியை தொலைத்துவிட்டு வாழ்கின்றனர்.
மக்களின் கோரிக்கைகளுக்காக போராடுவது நல்லதுதான். ஆனால், மக்களையே வேதனைக்கும், அவதிக்கும் உள்ளாக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.