
தமிழக விவசாயிகளுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமனை போலீசார் கைது செய்தனர்.
பயிர்கடனை தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தினர். இதில் திரைப்பட இயக்குநர் வ.கவுதமனும் கலந்து கொண்டார். அப்போது திடீரென போராட்டக் களத்திற்குள் நுழைந்த போலீசார், மாணவர்களையும், கவுதமனையும் கைது செய்தனர்.