
சபாநாயகர் தனபாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆயிரம் விளக்கு அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் தனபால் நேற்று சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்.பின்னர் மாலையிலிருந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
காய்ச்சல் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் அதிகாலை 5.30 மணியளவில் ஆயிரம் விளக்கு அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.உடனடியாக சபாநாயகர் தனபாலை காண முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காலை 9 மணியளவில் அப்போல்லோ மருத்துவமனை வந்தார்.
அங்கு அவர் சபாநாயகர் தனபாலை பார்த்து விட்டு மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
சபாநாயகர் தனபால் 4வது தளத்தில் 407வது வார்டில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.