
திருநெல்வேலி
ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை போர்க்கால அடிப்படையில் கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலியில் பல்வேரு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓகி புயலில் காணாமல்போன மீனவர்களை கண்டுபிடித்து தர வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய மக்கள் மேடை தேசியக்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமைத் தாங்கினார். மதிமுக மாநிலத் தேர்தல் பணிக்குழு துணைச் செயலர் விஜயகுமார் பாக்கியம் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் "ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை போர்க்கால அடிப்படையில் கண்டுபிடிக்க வேண்டும்,
இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்,
உயிரிழந்த மீனவர்களுக்கு உடனடியாக இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் உஸ்மான் கான், மாவட்டச் செயலர் அப்துல் கனி, மாவட்டத் துணைத் தலைவர் ஜாபர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டச் செயலர் அப்துல் ஜப்பார் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.