எதிர்ப்பையும் மீறி பாஜக பெண் நிர்வாகிக்கு நீதிபதி பதவி...! அடுத்த நிமிடமே வழக்கறிஞர்கள் எடுத்த அதிரடி முடிவு

By Ajmal KhanFirst Published Feb 6, 2023, 2:49 PM IST
Highlights

வழக்கறிஞர் விக்டோரியா கவுரிக்கு நீதிபதி பொறுப்பு வழங்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்க்கு  உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்புக்கு மத்தியில் குடியரசு தலைவர் நீதிபதியாக ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நீதிபதிகளாக பரிந்துரை செய்த கொலிஜியம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 23 நீதிபதிகளின் பதவியிடங்கள் காலியாக இருந்ததால் வழக்கானது விரைந்து முடிக்க முடியாத நிலை இருந்தது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும்,  வெங்கடாச்சாரி லக்‌ஷ்மி நாராயணன், லக்‌ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி ஜான் சத்யன், ராமசாமி நீலகண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய ஆறு வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம், கடந்த மாதம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி..! ஒவ்வொரு கட்சிக்கு ஏற்றபடி கூவுகிறார்- செல்லூர் ராஜு அதிரடி

பெண் வழக்கறிஞருக்கு எதிர்ப்பு

இதில் பாஜக நிர்வாகியாக இருந்த விக்டோரியா கௌரிக்கு நீதிபதி பொறுப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். விக்டோரியா கௌரிக்கு எதிராகவும்,ஆதரவாகவும் கொலிஜியத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருந்தனர். விக்டோரியா கௌரி, சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பேசிய வெறுப்பு பேச்சுகளைச் சுட்டிக்காட்டி அவரது நியமனத்தைத் திரும்பப் பெறுமாறு அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவது வரவேற்கதக்கது எனவும் கடிதத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

 இந்தநிலையில்  வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் பதவியேற்கும் பட்சத்தில், சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயரவுள்ளது.  இந்தநிலையில் விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு வருகிற 10 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்.! ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் திடீர் வாபஸ்..! பின்னனி என்ன.?

click me!