
சசிகலாவை நீக்க என்ன வழின்னு நீங்களே சொல்லுங்க மிஸ்டர் ஓபிஎஸ்…. ஐடியா கேட்கும் தம்பிதுரை…
அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவை எப்படி அந்தப் பதவியில் இருந்து நீக்குவது என நீங்களே சொல்லுங்கள் என துணை சபாநாயகர் தம்பிதுரை ஓபிஎஸ்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகளுக்கிடையே தொடர்ந்த இழுபறி நீடிக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என இரண்டு நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இணைப்பு குறித்து பேச முடியும் என ஓபிஎஸ் அணியினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுகவின் பொதுக் குழு கூடி சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என தெரிவித்தார்.
சசிகலாவை தனிப்பட்ட முறையில் யாரும் நீக்க முடியாது என தெரிவித்த தம்பிதுரை, அவரை பொதுச் செயலாளர் பதவியில் இருந்தது எப்படி நீக்குவது என்பதற்கு ஓபிஎஸ் ஒரு வழி சொல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார்.