
தமிழகத்தில் டெங்கு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மத்திய அரசு அனுப்பியுள்ள குழு இன்று சென்னையில் ஆய்வு மேற்கொள்கிறது.
கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 10 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மாவட்டம் தோறும் அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.
டெங்கு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு இது குறித்து மத்திய அரசிடம் எந்த உதவியும் கேட்கவில்லை என, மத்திய அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் டெங்கு நோய் குறித்து நேரில் ஆய்வு செய்ய டாக்டர் பிஸ்வாஸ், வினய் கார்கே, டாக்டர் கல்பனா உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு நேற்று சென்னை வந்தது.
இந்த குழுவினர் இன்று சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சென்று, டெங்கு நோயின் தாக்கம் குறித்து நேரில் செய்ய உள்ளனர். மேலும் மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு அளிக்கப்படும், சிகிச்சை முறைகளையும் பார்வையிடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து அக்குழுவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து மத்திய குழு டெங்கு குறித்து மறிக்கை அளிக்க உள்ளது.